செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By VM
Last Updated : வெள்ளி, 16 நவம்பர் 2018 (13:35 IST)

ஆபாசமாக இருப்பதாக புகார்..! வெப் சீரியல்களுக்கும் சென்சார்!

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற இணைய தளங்களில் உள்ள  வெப் சீரியல்கள் மற்றும் இணைய தள குறும்படங்களில் அதிக ஆபாசம் இருப்பதாக கூறி  டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு  நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த கட்ட விசாரணை அடுத்த வருடம் பிப்ரவரியில் நடக்கவுள்ளது. அரசு எடுக்கும் முடிவை பொறுத்து வெப் சீரியல்களுக்கு சென்சார் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த பிரச்னையை தவிர்க்க Netflix, Amazon Prime போன்ற தளங்கள் தாங்களாகவே ஆபாச காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.