திங்கள், 19 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Modified: சனி, 6 டிசம்பர் 2025 (14:24 IST)

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு
சமீப காலமாக ஒரு சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை விமர்சித்து வந்த ராஜகுமாரன் தற்போது சரத்குமார் தான் சிறந்த நடிகர் என்று பேசியிருக்கிறார். சமீப காலமாக ரஜினி கமல் விஜய் என தொடர்ந்து இவர்களைப் பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார் ராஜகுமாரன். குறிப்பாக இயக்குனர் மகேந்திரனை பற்றிய அவர் கூறியதுதான் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
ஒட்டு மொத்த திரை பிரபலங்களும் ராஜகுமாரனுக்கு எதிராக மாறினார்கள். சில படங்களை எடுத்திருந்தாலும் இது மகேந்திரனின் படம் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய படங்கள் தனித்துவம் மிக்கவையாக தான் இருந்தன. பாலச்சந்தர் பாலு மகேந்திரா இவர்கள் வரிசையில் மகேந்திரனையும் ரசிகர்கள் ஒரு லிஸ்டில் வைத்திருந்தனர். அந்த அளவுக்கு மகேந்திரன் மீது மரியாதை மதிப்பும் இன்றளவு வைத்திருக்கின்றனர்.
 
அப்படி இருந்த இயக்குநரை அவர் எல்லாம் ஒரு இயக்குனரா? 100 படங்களுக்கு மேல் எடுத்த ராம நாராயணனை கொண்டாடாமல் சில படங்கள் மட்டும் எடுத்த மகேந்திரனை மட்டும் ஏன் கொண்டாடுகிறார்கள்? அவர் படங்கள் நன்றாகவா இருக்கிறது ?நான் அவர் படத்தை பார்த்ததே இல்லை .உதிரிப்பூக்கள் படம் எல்லாம் ஒரு படமா என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.
 
இந்த ஒரு கருத்து ராஜகுமாரனுக்கு எதிராக ஒட்டுமொத்த ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் .இந்த நிலையில் கமலை பற்றியும் அவர் பேசியிருந்தார். கமல் நடித்த சிறந்த படங்கள் என்றால் நான்கு படங்களை மட்டுமே சொல்லலாம் .மற்றபடி அவரெல்லாம் ஒரு நடிகரா என்றும் கேட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது சரத்குமார் பற்றி ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.
 
அதில் கமலை பற்றி நான் ஏன் அப்படி சொன்னேன் என்பதற்கும் காரணத்தை கூறி இருக்கிறார். சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி என குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் தான் அந்த கேரக்டராகவே கமல் இருந்திருப்பார். மற்ற படங்களில் எல்லாம் கமலை மட்டும் தான் பார்க்க முடியும். படத்தில் நான் கமலை மட்டும்தான் பார்த்தேன். எனக்கு அங்கு ஒரு பெண் கதாபாத்திரம் தெரியவில்லை.
 
அதைப்போல விருமாண்டி படத்திலும் எனக்கு கமல் மட்டும் தான் தெரிந்தார். அந்த கதாபாத்திரம் எனக்கு தெரியவில்லை. இப்படி அந்த மீட்டருக்குள் அவர் நடிக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் கமல் அப்படி நடிக்க மாட்டார். சொன்னதை விட அதிகமாகவே நடிப்பார். அதனால் தான் அங்கு கமலாக தெரியும். ஆனால் சரத்குமாரை நான் சிறந்த நடிகர் என்று சொல்வேன். மீட்டருக்குள் நடிக்கக் கூடிய நடிகர் என ராஜகுமாரன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்