செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 25 நவம்பர் 2017 (00:22 IST)

ரூ.2 கோடி இழப்பீடு: அறம் இயக்குனரிடம் கேட்கும் கன்னட தயாரிப்பாளர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் கோபிநயினார் இயக்கிய 'அறம்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் தன்னிடம் அனுமதி பெறாமலேயே இந்த படத்தின் கதையை கோபி திருடிவிட்டதாகவும் கன்னட தயாரிப்பாளர் மனோஜ்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.


கடந்த 2013ஆம் ஆண்டு தான் 'பரிவரா' என்ற பெயரில் கன்னடத்தில் ஒரு படத்தை தயாரித்ததாகவும், ஆனால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால் சில முக்கிய பிரமுகர்களுக்கு அந்த படத்தை போட்டு காட்டியதாகவும், அவர்களில் ஒருவர் கோபி என்று தனது மனுவில் கூறியுள்ள மனோஜ்குமார், தன்னிடம் அனுமதி பெறாமல் தனது கதையை திருடி 'அறம்' படத்தை இயக்கிய கோபி, தனக்கு இழப்பீடாக ரூ.2 கோடி தரவேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.