திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 25 நவம்பர் 2017 (19:51 IST)

மெர்சல் 40 கோடி நஷ்டம்; பிரபல தயாரிப்பாளரின் அதிர்ச்சி தகவல்

அட்லி இயக்கத்தில் தலபதி விஜய் நடிப்பில், கடந்த தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம் மெகா ஹிட்டாகி வசூல் மழை பெழிந்து வருகிறது. இதுவரை ரூ 250 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
இன்றும் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடி கொண்டிருக்கிறது. படத்தை எடுத்த அனைத்து திரையரங்குகளும் படம்  நல்ல லாபத்தை தந்ததாக கூறினார்கள்.
 
இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்தும் அதையெல்லாம் முறியடித்து வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி மெர்சல் படம் ரூ. 30 முதல் ரூ. 40 கோடி நஷ்டம் என்று சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.