திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By
Last Updated : சனி, 19 மே 2018 (17:34 IST)

ஹாலிவுட்டில் ரிலீஸான சிறந்த வாழ்க்கை வரலாற்று படங்கள்

பொது வாழ்க்கையில் சிறந்து விளங்கியவர்களின் வாழ்க்கையை படமாக எடுத்து வெற்றி பெறசெய்வது இயக்குனர்களின் சிறப்பம்சம். அந்த வகையில் ஹாலிவுட் இயக்குனர்களின் கைவண்ணத்தில் வெளிவந்த சிறந்த வாழ்க்கை வரலாற்று படங்களை பற்றி பார்ப்போம்.
 
பிரேவ் ஹார்ட்:
 
கடந்த 1995ம் ஆண்டு மெல் கிப்சன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் பிரேவ் ஹார்ட். ஸ்காட்லாந்து நாட்டின் சுதந்திரத்துக்காக ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய வில்லியம் வேலசின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தில் வரும் காதல் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் அனைத்தும் உணர்ச்சிபூர்வமாக படமாக்கப்பட்டிருக்கும். இத்திரைப்படத்துக்காக ஐந்து ஆஸ்கார் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் இந்த படம் 271 இடத்தில் உள்ளது.
 
காந்தி:
 
கடந்த 1982ம் ஆண்டு ரிச்சர்ட் அடென்போரோ இயக்கி, தயாரித்த படம் காந்தி. பென் கிங்ஸ்லி இப்படத்தில் காந்தியாக நடித்திருப்பார். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக அகிம்சை வழியில் போராடிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தில் சுதந்திரத்துக்காக காந்தி மேற்கொண்ட அறவழிப் போராட்டங்கள் அனைத்தும் தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கும்.மேலும், காந்தியின் உயர்ந்த குணங்கள் பற்றி தெளிவாக பேசப்பட்டிருக்கும். இத்திரைப்படத்துக்காக எட்டு ஆஸ்கார் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
 
பீலே:
 
கடந்த 2016ம் ஆண்டு ஜெஃப் ஜிம்பால்ஸ்ட் மற்றும் மைக்கெல் ஜிம்பால்ஸ்ட் இயக்கத்தில் பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட வீரர் பீலே அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பீலே என்ற பெயரிலேயே படமாக எடுத்தனர். பிரேசிலுக்கு மூன்று உலகக் கோப்பைகளைப் பெற்றுத் தந்த வீரர் பீலே. இவர் இதுவரை கால்பந்தாட்ட போட்டியில் மொத்தமாக 1283 கோல்கள் அடித்துள்ளார். இவரது சொந்த வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பீலே: மேதையின் பிறப்பு என்ற பெயரில் திரைப்படம் ரிலீஸானது. இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
 
எ பியுடிபுல் மைன்ட்:
 
கடந்த 2001ம் ஆண்டு ரான் ஹோவர்ட் இயக்கத்தில் ரஸ்ஸல் குரோவ் நடிப்பில் வெளிவந்த படம் எ பியுடிபுல் மைன்ட். பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ஜான் நாஷ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. இத்திரைப்படத்தில் கணித மேதையான ஜான் நாஷ் தனது திறமையை வைத்து மக்களுக்கு செய்த மனிதநேயமிக்க உதவிகளை பற்றி தெளிவாக கூறப்பட்டிருக்கும். அதேவேளையில் அவரது பயமுறுத்தும் வாழ்க்கை பயணமும் அழகாக படமாகப்பட்டிருக்கும். இத்திரைப்படத்துக்காக 4 ஆஸ்கர் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
 
தி சோஸியல் நெட்வொர்க்:
 
கடந்த 2010ம் ஆண்டு டேவிட் ஃபிஞ்சர் இயக்கத்தில் ஜெசி அய்சன்பெர்க்கின் நடிப்பில் வெளியான திரைப்படம் தி சோஸியல் நெட்வொர்க். ஃபேஸ்க் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் வாழ்க்கையை காட்சிப்படுத்தி இருக்கும் படம். இப்படத்தில் மார்க்கின் கல்லூரி வாழ்க்கை, காதல், துரோகம் உள்ளிட்ட அவரது வாழ்க்கையின் பக்கங்களை அழகாக  படமாக்கியிருப்பார் இயக்குனர். தனிப்பட்ட விதத்தில் நட்பு வட்டம் இல்லை என்றாலும், மனித நட்பு வட்டங்களைப் புரிந்துகொண்டு அவர்களை இணைக்க பேஸ்புக்கை உருவாக்கியிருப்பார் மார்க். இத்திரைப்படத்துக்காக 4 ஆஸ்கர் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது.