1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 ஏப்ரல் 2018 (11:15 IST)

மகன் முன் எப்போதும் நிர்வாணமாகத்தான் இருப்பேன்: பிரபல நடிகை அதிர்ச்சி பேட்டி

பிரபல ஹாலிவுட் பட நடிகையும் மாடல் அழகியுமான ஆம்பர் ரோஸ், கணவரை விவாகரத்து செய்துவிட்டு, 5 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது ஐந்து வயது மகன் முன், தான் எப்போதும் நிர்வாணமாகத்தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
தனது மகனுக்கு பெண்ணுறுப்பு உள்பட பெண்களின் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும் என்றும், சிறு வயதிலேயே பெண்கள் குறித்து அவர் முழுமையாக தெரிந்து கொண்டால் பின்னாளில் அவர் பெண்ணியவாதியாக வளர்வான் என்றும், ஆம்பர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
 
ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்தாலும் ஆண்மகன் சாதாரணமாக இருக்க வேண்டும். அப்படி வளர்க்கப்பட்டால் இந்த உலகில் பாலியல் குற்றங்களே இருக்காது என்றும், என் மகன் பெண்களை மதிப்பவனாக வளர  வேண்டும் என்பதற்காகத்தான் அவன் முன் நிர்வாணமாக தோன்றுவதாகவும் ஆம்பர் அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார். மேலும் தனது வீட்டில் பெண்ணுறுப்பின் புகைப்படங்கள் அதிகம் உள்ளது என்றும், அதை பார்த்து பார்த்து வளரும் என் மகன், அவனுடைய நண்பர்களை விட மெச்சூரிட்டி அதிகமானவனாக வளர்ந்து வருவதாகவும் ஆம்பர் கூறியுள்ளார். இந்த பேட்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.