கேன்ஸ் ரெட் கார்பெட்: ஷூவை கழட்டிய நடிகையால் பரபரப்பு!
ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸில் கேன்ஸ் திரைபட விழா நடைபெரும். அந்த வகையில், தற்போது 2018 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இந்தியாவில் இருந்து தீபிகா படுகோனே, கங்கனா ரனாவத், ஐஸ்வர்யா ராய், தனுஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். கேன்ஸ் விழாவில் ரெட் கார்பெட் அங்கீகாரம் எளிதில் கிடைக்க கூடிய ஒன்று அல்ல.
திற்மை, அழகு, ரசிகர்களின் வரவேற்பு என பல விஷயங்களை உள்ளடக்கியது கேன்ஸ் ரெட் கார்பெட். ரெட் கார்பெட்டில் கலந்து கொள்ளும் நடிகைகள் பலர் தங்களை சிறப்பாக முன்நிறுத்த முற்படுவர்.
ரெட் கார்பெட்டில் நடிகைகளின் உடை மற்றும் தோட்டம் ஹைலைட் ஆவது வழக்கம். அந்த வகையில் நடிகை ஒருவர் ரெட் கார்பெட்டில் ஷூவை கழட்டியது ஹைலைட் ஆகியுள்ளது.
ஆம், விழாவின் போது ட்விலைட் படத்தின் நாயகி கிரிஸ்டென் ஸ்டீவர்ட் ரெட் கார்பெட்டில் சூவை கழட்டியது தற்போது வைரலாகி வருகிறது.
கிரிஸ்டென் ரெட் கார்பெட்டில் வந்தபோது மழை பெய்ததால், ஷூவுடன் வேகமாக நடக்க சிரமமாக இருந்ததால் அதனை கழட்டி விட்டு விரைந்து சென்றுள்ளார்.