தனுஷின் ஹாலிவுட் படத்தின் தமிழ் டைட்டில் அறிவிப்பு

Last Updated: திங்கள், 14 மே 2018 (19:35 IST)
நடிகர் தனுஷ் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை தமிழிலும் டப் செய்து ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து தமிழ்ப்பதிப்பின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை சற்றுமுன் தனுஷ் வெளியிட்டுள்ளார். தமிழில் இந்த படத்திற்கு 'வாழ்க்கைய தேடி நானும் போனேன்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது.

தனுஷ், பெரினைஸ் பெஜோ, பார்கட் அப்டி, எரின் மொரியார்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கென் ஸ்காட் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :