எம்மி விருது பெற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸ் !

Last Modified திங்கள், 23 செப்டம்பர் 2019 (15:16 IST)
தொலைக்காட்சி தொடர்களுக்காக வழங்கப்படும் விருதான எம்மி விருதை கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியல் பெற்றுள்ளது.

தொலைகாட்சி தொடர்களுக்கான மிக உயரிய விருதாகக் கருதப்படும் எம்மி விருதுகள் கலை மற்றும் அறிவியல் அகாடமி எனும் அமைப்பால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று  71 ஆவது எம்மி விருதுகள் விழா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறந்த தொடருக்கான விருதை உலகப்புகழ்பெற்ற இந்த ஆண்டோடு முடிந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் வென்றுள்ளது. இத்தொடரில் நடித்த பீட்டர் டிங்க்ளேஜ் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இது அவர் வாங்கும் மூன்றாவது எம்மி விருதாகும். மேலும் இந்தியர்களுக்கு நன்கு அறிமுகமான செர்னோபில், ஃப்ளீபேக் போன்ற தொடர்களும் அதில் நடித்த நடிகர் நடிகைகளும் விருதுகளைக் குவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :