விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம்: ஓடிடியில் வெளியாகிறதா ஆவணப்படம்?
தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளாக கருதப்படும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் குறித்த செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திருமண நிகழ்வை ஒரு ஆவணப்படமாக தயாரித்து, பிரபல ஓடிடி தளத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது திருமணத்தை இதே போன்று ஆவணப்படமாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
திரையுலகைச் சார்ந்த பலரும், ரசிகர்களும் இந்த நட்சத்திர தம்பதிகளின் திருமணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva