1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 பிப்ரவரி 2026 (19:21 IST)

மீண்டும் காமெடியில் இறங்கிய சந்தானம்!. அதுவும் ரஜினி படத்தில்!.. முக்கிய அப்டேட்!...

jailer2
கோலிவுட்டில் வடிவேலு, விவேக் போன்றவர்கள் காமெடியில் கலக்கி கொண்டிருந்தாலும் சந்தானமும் ஒரு முக்கிய காமெடி நடிகராக மாறினார். குறிப்பாக கவுண்டமணி பீல்ட் அவுட் ஆனபோது அவரை போலவே மற்றவர்களை கலாய்த்து காமெடி செய்ய ஆரம்பித்தார் சந்தானம்.

அது நன்றாகவே ஒர்க்அவுட் ஆனது. பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார் சந்தானம்.. குறிப்பாக இளம் நடிகர்களின் படங்களில் காமெடி செய்து வந்தார் சந்தானம். இவரின் காமெடிக்கென ஒரு ரசிகர் கூட்டமே உருவானது.

ஆனால், ஒரு கட்டத்தில் காமெடி நடிகராக நடிப்பதை விட்டுவிட்டு படங்களில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார் சந்தானம். பல வருடங்கள் காமெடி பக்கம் வரவே இல்லை. அதனால்தான் யோகி பாபு போன்றவர்கள் காமெடி நடிகராக மாறினார்கள்.

இந்நிலையில், பல வருடங்களுக்குப் பின் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தில் காமெடி வேடத்தில் சந்தானம் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. பல வருடங்களுக்குப் பின் காமெடியனாக சந்தானத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.