வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2019 (19:39 IST)

"கல்லி பாய்" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை!

2020ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருத்திற்கு 28 இந்திய திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட அதில் அதிகாரப்பூர்வமாக "கல்லி பாய்" திரைப்படம் தேர்வாகியுள்ளது. 


 
ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் நடிப்பில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியான திரைப்படம் "கல்லி பாய்". தாராவில் ஒரு எளிய முஸ்லீம் குடும்பத்தில் பிறந்து வளரும் கதாநாயகனுக்கு பாப் சாங் பாடகராக வரவேண்டும் என்பது தான் அவரது லட்சியம். அதற்காக விடா முயற்சியுடன் செயல்பட்டு வரும் அவர் கடைசியில் பாப் சாங் பாடகராக ஆனாரா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. 
 
வட சென்னை , சூப்பர் டீலக்ஸ் , ஓத்த செருப்பு , உயரே , டியர் காம்ரேட் , கேசரி, அந்தாதுன் , பாதாய்ஹோ போன்ற மொத்தம் 28 இந்திய படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில்  இந்தியா சார்பில் "கல்லி பாய்"  திரைப்படம் தேர்வு செய்து பரிந்துரைத்துள்ளனர்.  வருகிற பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.