1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
  4. A famous actor who helped poor by selling his Costly car

தனது காஸ்ட்லி காரை விற்று ஏழைகளுக்கு உதவிய பிரபல நடிகர்

நடிகர்
நடிகர் டேனியல் கிரேக், தான் பயன்படுத்தி வந்த காஸ்ட்லி காரை ஏலத்தில் விட்டு, அதில் கிடைத்த தொகையை அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கேசினோ ராயல்ஸ், குவாண்டம் ஆப் கோலார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் டேனியல்கிரேக், ஜேம்ஸ்பாண்ட் படம் மூலம் பிரபலமானார்.
 
டேனியல்கிரேக் இல்லாதோருக்கு உதவி செய்வதற்காக தான் பயன்படுத்தி வந்த ஆஸ்டன் மார்டின் காரை ஏலத்தில் விட முடிவு செய்து அதனை, நியூயார்க்கில் கிறிஸ்டி மையத்தில் ஏலத்தில் விட்டார். அந்த கார் ரூ.3 கோடிக்கு (4,68,500 டாலர்) விற்பனை ஆனது.
காரை விற்று வந்த பணத்தை டேனியல் கிரேக் அவரது மனைவி ரேசல் வெய்ஸ் ஆகியோர் ஒரு அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கினர்.
அடுத்த கட்டுரையில்
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை?