1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (10:31 IST)

அந்த இயக்குநர் 5 கோடி ரூபாய் தருவதாக கூறியதால் தான் பவன் கல்யாணை அசிங்கமாக பேசினேன் - ஸ்ரீரெட்டி

பவன் கல்யாணை பற்றி அவதூறாக பேசினால் எனக்கு 5 கோடி ரூபாய் தருவதாக இயக்குநர் ராம்கோபால் வர்மா கூறியதால் தான் பவன் கல்யாணை அசிங்கமாக பேசினேன் என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரெட்டி என்ற பெயரை கேட்டாலே தெலுங்கு திரையுலகினர் நடுங்கும் வகையில் அவர் தினந்தோறும் ஒரு பெரிய மனிதரின் முகமூடியை கிழித்து அவர்களுடைய சுயரூபத்தை வெளிக்காட்டி வருகிறார்.
 
ஸ்ரீரெட்டி அடுக்கடுக்காக புகார்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த புகார்களை மீடியாக்கள் முன் தெரிவிக்காமல் போலீசில் புகார் செய்யும்படி பவன்கல்யாண் ஸ்ரீரெட்டிக்கு அறிவுரை வழங்கினார். இந்த அறிவுரைக்கு தனது டுவிட்டரில் நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி திடீரென என்ன நினைத்தாரோ, மீடியாவை அழைத்து பவன்கல்யாணை ஆபாசமாக திட்டினார்.
 
டுவிட்டரில் பவன்கல்யாணுக்கு நன்றி தெரிவித்துவிட்டு திடீரென அவரை விமர்சனம் செய்வது ஏன் என்றும் அனைவருக்கும் புரியாத புதிராக இருந்த நிலையில், இதற்கான காரணத்தை ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ராம்கோபால் வர்மா பவன் கல்யாணை பற்றி அவதூறாக பேசினால் எனக்கு 5 கோடி ரூபாய் தருவதாக கூறியதால் தான் பவன் கல்யாணை அசிங்கமாக பேசினேன் என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இத்தனைக்கும் காரணமான ராம்கோபால் வர்மாவை கைது செய்யாவிட்டால் நடப்பதே வேறு என நடிகர் பவன் கல்யான் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.