1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 21 ஏப்ரல் 2018 (09:37 IST)

காலா ரிலீஸ் குறித்து நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் காலா திரைப்படம் ஏப்ரல் 7-ந் தேதி காலா ரிலீஸாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 
 
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போராட்டத்தால், ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீசாக வேண்டிய காலா படத்தின் ரிலீஸ் டேட் தள்ளிவைக்கப்பட்டது.
 
இந்நிலையில் 17.04.2018 அன்று அரசு தரப்பு முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது. 
இதனையடுத்து நடிகரும் காலா படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் காலா திரைப்படம் ஏப்ரல் 7-ந் தேதி வெளியாகும் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.