பெண்கள் தினம் வாழ்த்துகள் : பெண்களின் வலிமை ... சிறப்புக் கட்டுரை !

womens day special
sinoj kiyan| Last Updated: ஞாயிறு, 8 மார்ச் 2020 (11:35 IST)
பெண்கள் தினம் வாழ்த்துகள் : பெண்களின் வலிமை !
பரிசுத்த வேதாகமத்தில் ஆதாமின் விலாவிலிருந்து எடுத்த எலும்பைக் கொண்டு தான் ஏவாலை கடவுள் மண்ணிலிருந்து படைத்ததாகக் கூறப்படுகிறது. கடவுள் அவ்விதம் விலாவை அவளுக்குக் கூடுதலாகப் படைக்கவில்லை என்றாலும் கூட பெண்களுக்குப் பேருகாலம் என்று
சொல்லப்படுகிற பிள்ளை பெருகின்ற காலம் தொடங்கி அவல் முதுமைப் பருஅம் அடைந்து ஓய்கிற காலம் வரைக்கும் அவளுக்குக் கணவன் மார்கள் ஆயிரம் அல்ல லட்சம் விலா எலும்புகள்
கொடுத்திருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு நாளும் இடுப்பு ஒடிகிற மாதிரி வேலைகள் செய்தால்தான் வீட்டில்
குடும்பத்தார் அன்று வயிறு நிறைக்க முடியும். அந்த வகையில் பெண்களைப் போற்றுதும் ..பெண்களைப் போற்றுதும்.
கடவுள பெண்ணுக்குக் ஒரு விலாவை எச்சாகப் படைக்கவில்லை என்றாலும் அவளது குட்ம்பம பாரம் தாங்குவதற்கான பெலத்தை எங்கிருந்து பெறுவாள்..?

வரும் முன் காப்பதை நனக்றிந்தவன் கடவுள்..அதனால் தான் பெண்களின் வாழ்க்கையை நன்குணர்ந்து அவளது குணாம்சத்தை மனதோடு பொருத்து பொறுமையின் சின்னமாகவும் குணக் குன்றின் அம்சமாகவும் அவனைப் படைத்துள்ளான். பெண்களின் நிலைமை இன்று முந்தைய காலத்தை விட சிறந்தோங்கி நிற்கிறது. புதுமைக் கவிஞன் பார்தி மாதரைக் கொண்டாடினான். புதுமைப்பெண்கள என்று கவிதைகளைத் தலைக்கு வைத்துக் கனவு கண்டான். இன்றைய 21 ஆம் நூற்றாண்டு மகளிரைக் கண்டால் அவன் ஆப்பிள் டேப்ளாய்டில் அவனே நவீனம் கவிதைக்கும் பாலம் போட்டிருப்பான்.

ஆனாலும் ஒன்ரும் குறையில்லை. அவன் தீர்க்க தரிசனம் கண்டதை இன்றைய மாதர்கள் நிறைவேற்றி வருகின்றனர் என்பப்தில் கவிஞனாக நானும் அகம் மகிழ்கிறேன்.
காற்றைப்போல் பெண்கள் காலைமுதல் ஓடி ஒடி முட்டி தேயாத குரையாக கும்பத்திற்காக பட்டுப்பாத்திரமாகத் தேய்கிறார்கள் எனபதை யாராலும் மறுக்க முடியாது. அவ்ள பிறாப்பு முதல் பிறந்த வீட்ட்லும் புகுந்த வீட்டிலும் செய்கிற வேலைகளுக்கு யாராலும் கூலியே கொடுத்து விட முடியாது. அது அன்பினால் நெய்யப்ப்ட்ட மனம்., அதில் அலுப்பு வந்தாலும் ஐந்து நிமிடம் ஓய்வெடுத்து விட்டு ஆறாவது நிமிடம் அடுப்பண்டை நின்று சோறு பொங்கிப்போட்டு பதினெட்டாவது நிமிடத்தில் பெற்ற குழந்தைக்குப் பாலூட்டுவாள். ஒருவேலை அந்த தெய்வத்தின் மறு ரூபம்தான் இந்தப் பெண்களோ!!!!!!
பாரதியின் மனைவி செல்லம்மால் ஒருமுறை வெளியூர் சென்று விடுகிறாள். அப்போது பாரதிக்குப் ப்சியெடுக்கவே தன் வீட்டில் (அபோது அடுப்பு) மண்ணெண்ணெய் ஊற்றி அடுப்புப் பற்ற வைக்க உலகைச் சுற்றிவருபவர போல அவ்வலவு கஷ்டப்படுகிறான், அவனால் அடுப்பைப் பற்றவைக்க முடியவில்லை. அவருக்கு அருகில் இருந்த பாரதிதாசனிடம் இதுபற்றிக் கூறுகிறான். பெண்கள் தினம் அடுப்பைக் கூட்டி சமையல் செய்யும் பணியும், அவள், குடும்பத்தையும் கவனைத்துக் கொண்டு கணவனையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு எப்படி அவளால் இத்துணை சுமைகளையும் பொறுத்துக்கொள்ள முடிகிறது என்று மனம் இளகிக்கூறியிருக்கிறார்.அப்படியிருக்க பெண்கள் அன்றாடம் காலைமுதல் இரவுவரை கும்பத்திற்காய் பிள்ளைகளுக்காய் தம்மை அணுவணுவாய் தியாகம் சசெய்கிறார்கள் இதில் என்ன ஆச்சர்யம் என்னவென்றால் சுய்நலம் பாராத அந்த தாயுள்ளத்தால் தான் இன்று ஆண்களின் சாதனைப் பயனம் இமயத்தில் கொடிகட்டி ஜெயம்னெறு கூறிப் பறக்கிறது.

இதைக் கலியாணம் ஆகாத ஆண்கள் கூட மறுக்க முடியாது. காரணம் அவனைப் பெறறு வளர்த்தவளும் ஒரு தாய் என்பதனால்தான்.

இந்த தாய்க்க்கு எவ்வள்வு சக்தி உண்டென்பதற்கு ஒரு சரித்திர உதாரணம் உண்டு: ஆம்! உலக்மகா வீரன் ஐரோப்பியச் சக்கரவார்த்தி மாவீரன் நெப்போலியன் தன் தாயைப் பார்க்க வருகிறான். அவள் மாளிகையில் வீட்டில் சிறை வைக்கப்ட்டவள் போலவும் சாதாரண குடிமகலைபோலவும் தான் உலகம் போற்றும் தீவீரன் நெபோலியனைப் பெற்றெடுத்த தாய் லெட்டிஸியா ரெமோலினா கடுகு சிக்கனமாய் ஒரு துறவுக் கோளாத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ரொம்ப நால் கழித்து தன் தாயைப் பார்க்க ஆசையோடு வருகிறான் நெப்போலியன். அரணமனைக்குள் நுழைகிறான் தன் தாயின் எளிமைக் கோலத்தைக் கண்டு அதிர்ச்சிடைத்தவனாய் நிற்கிறான்….
தன் தாய் முன்னை பார்த்ததைவிட அதிகம் இளைத்து போல் தெரிகிறது அவனது பார்வைக்கு… தன் தாயைப் பார்த்துச் சொல்கிறான் இப்படி:

அம்மா என் அண்ணன் அன்னி: தம்பி கொளுந்தியா : தங்கை மச்சினம் : உற்றார் உறவினர் என எலோருக்கும் நான் நாடு கொடுத்து அரசவை கொடுத்து பணம் பணட்ம் கொடுத்து செலத்தை சொத்துக்களை எல்லாம் வாரிக்கொட்டிக் கொடுத்தாலும் கூட இதெல்லாம் பத்தவில்லை என்று கேட்டு நச்சரித்து என்னிடமிருந்து பெற்றுக்கொண்டு கடைசியில் எனக்கே துரோகம் செய்கிறார்கள்…இதெல்லாவற்றையும் விட
இன்னும் பனம் வேண்டும் என்று நப்பாசையில் திளைக்கிறாகள்… ஆனால் அம்மா நான் உனக்கு அவ்வளவு பனம் கொடுத்தேனா அனுப்பினேனே அதையெல்லாம் பயன்படுத்தாமல் ஏன் இபபடி இருக்கிறாய்
என்று கேட்கிறான்…அவன் கண்களின் தாய்ப் பாசம் கொப்பளிக்கிறது..


ஆனால் அவன் தாய் அப்படியே நிற்கிறான் …எதுவும் பேசவில்லை.. லெட்டீஸியா காத்த அமைதியில் தாயின் சிக்கனம் தெருகிறது எளிமையின் இலக்கணம் புகிறது. ஆனால் பாதி உலகை வென்ற மாவீரனினுக்கு இது அவமாரியாதை அல்லவா அதனால் வலிப்பு வந்தவன் போல் கையை சிலுப்பு மூச்சை இழுத்து ஆவேசம் கொண்டு தாயைப் பார்த்துச் சொல்கிறான்..
அம்மா .. இந்த உலகில் எது என்னைவிட்டுப் போனாலும் அதைப் பற்றி நான் துளியும் விசனம்பட மாட்டேன். ஆனால் உனக்கு மட்டும் எதாவது ஆனது என்றால் இவ்வுலகத்தில் என்னை யாராலுமே கட்டுப்படுத்த முடியாது என்று சிங்கமாய் கர்ஜித்துவிட்டு சினம் கொண்ட சீறி வேங்கையாய் அவ்விடத்தை விட்டு வெளியேறுகிறான்..
உலகத்தையே அடக்க நினைத்தவனை வென்றது தாயின் பாசம் தானே.அதுதான் வீரனை மட்டும் அல்ல இவ்வுகலத்தையே வெல்லும் தெய்வீக
பாசப் பீடிகையை தன் தாய்மையெனும் முந்தானையில் முடிந்துவைத்திருப்பவள் தான் தாய்.
இப்போது தெரிகிறதா ஆதாமின் இடுப்பிலிருந்து கடவுள எடுத்த அந்த ஒற்றை அதிசய ’விலா’ என்பது
பெண்மையின் பெருமைக்கு ஆதிகாலத்திலேயே கடவுளால் அவளுக்குக் கொடுக்கப்பட்ட உன்னதப் பரிசு என்று.
- சினோஜ் கியான்
இதில் மேலும் படிக்கவும் :