புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (17:17 IST)

திருநங்கைகளுக்கு வீடு கட்ட ஒன்றரை கோடி – லாரன்ஸிடம் வழங்கிய அக்‌ஷய் குமார்!

திருநங்கைகளுக்காக வீடு கட்டித்தரும் நடிகர் ராகவா லாரன்ஸின் முயற்சியை பாராட்டி ஒன்றைரை கோடி நிதியுதவி செய்துள்ளார் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார்.

தமிழில் ஹிட் அடித்த படமான காஞ்சனா இந்தியில் ரீமேக் ஆகிறது. ராகவா லாரன்ஸ் இயக்கும் இந்த படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். நடிகர், நடன இயக்குனர் என்ற பன்முகங்கள் கொண்டவராக ராகவா லாரண்ஸ் இருந்தாலும் எளியவர்களுக்கு உதவுவதற்காக அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஆதரவற்ற திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரும் முயற்சியில் இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

லாரன்ஸின் இந்த முயற்சிக்கு உதவும் வகையில் ஒன்றரை கோடி நிதி வழங்கியிருக்கிறார் அக்‌ஷய்குமார். இந்தி காஞ்சனாவில் அக்‌ஷய் குமார் திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.