புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (22:03 IST)

சச்சின் சாதனையை தகர்த்த ஸ்மித்!

குறைந்த இன்னிங்ஸில் 26 சதங்கள் அடித்தவர்களில் இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்த சச்சினை இன்று ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் மூன்றாவது இடத்திற்கு தள்ளி அவரது சாதனையை தகர்த்துள்ளார்.
 
 
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆசஷ் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடரில் 4வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஸ்மித், இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் தற்போது 205 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறார்.


இங்கிலாந்து அணியின் ஆறு பந்துவீச்சாளர்கள் மாறி மாறி ஸ்மித்தின் விக்கெட்டை எடுக்க முயன்றும் தோல்வி அடைந்தனர். தற்போது இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 415 ரன்கள் எடுத்துள்ளது

 
 
குறைந்த இன்னிங்சில் 26 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில்  முதல் இடத்தில் டான் பிராட்மேன் உள்ளார். அவர் 69 இன்னிங்சில் 26 சதங்கள் அடித்துள்ளார். 2வது இடத்தில் ஸ்மித் 121 இன்னிங்சிலும் சச்சின் 136 இன்னி்ஙசிலும் விளாசி உள்ளனர்.