திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சூப்பரான சுவையான தக்காளி சாதம் செய்ய வேண்டுமா...?

தேவையான பொருட்கள்: 
 
சாதம் - 1 கோப்பை (நன்கு உதிரியாக வடிக்கப்பட்ட சாதம்)
தக்காளி - 4/5 
பெரிய வெங்காயம் - 1 
பூண்டு - 5/6 பற்கள் 
மிளகாய் பொடி - 1/4 தேக்கரண்டி 
மஞ்சள் பொடி- 1 சிட்டிகை 
கொத்தமல்லி - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 1 தேக்கரண்டி 
கிராம்பு - 2 
பட்டை - 1 அல்லது 2 
சீரகம் - 1/2 தேக்கரண்டி 
பச்சை மிளகாய் - 1 
கறிவேப்பிலை - சிறிதளவு 

செய்முறை:
 
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி தழை போன்றவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயையும் நீள வாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். 
 
அடுப்பில் வாணலியை வைத்து, அதில் 1 தேக்கரண்டி எண்ணையை ஊற்றி அது காய்ந்ததும் அதில் பச்சைமிளகாய், சீரகம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பிறகு, அதில் நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் பூண்டின் பற்களை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். 
 
பின்பு இதில் நறுக்கப்பட்ட தக்காளி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பை சேர்த்து பச்சையான வாசனை போகும் வரை வதக்கவேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் அந்த வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி, அந்த தக்காளி மற்றும் இதர பொருட்களின் கலவை இளகும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.