1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (13:41 IST)

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் திரண்ட ஆதரவாளர்களுக்கு தக்காளி சாதம், ரோஸ் மில்க்!

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் திரண்ட ஆதரவாளர்களுக்கு தக்காளி சாதம், ரோஸ் மில்க்!
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டின் முன் திடீரென இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை காலை 6 மணிவரை முதல் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் எஸ்பி வேலுமணி வீட்டின் முன் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலை முதல் எஸ்பி வேலுமணி வீட்டின் முன் குவிந்த அதிமுக தொண்டர்களுக்கு அதிமுக தரப்பிலிருந்து சற்றுமுன் ரோஸ்மில்க் வழங்கப்பட்டது இதனை அடுத்து மதிய உணவாக தக்காளி சாதமும் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
அதுமட்டுமின்றி மாலையில் டீ காபி வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் 6 மணிக்கு மேல் இரவு டிபன் வழங்கப்படும் என்றும் கூறப்படுவதால் எஸ் பி வேலுமணி வீட்டில் குவிந்து வரும் அதிமுக தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது