1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
  4. Want to make delicious coconut rice...?

சுவையான முறையில் தேங்காய் சாதம் செய்ய வேண்டுமா...?

தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்:
 
வடித்த சாதம் - 1 கப்
தேங்காய் துருவல் - முக்கால் கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
மிளகாய் வற்றல் - 3
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது.
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
வேர்க்கடலை - தேவைக்கு

செய்முறை :
 
* இஞ்சியை துருவிக்கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைக்கவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
* வாணலியில் எண்ணெய் சூடானவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் முந்திரி, வேர்க்கடலை, இஞ்சி துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
 
* அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். தேங்காய் நன்றாக வாசனை வர ஆரம்பித்தவுடன் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான தேங்காய் சாதம் தயார்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
எளிதில் கிடைக்கும் புதினாவில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா...?