வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 6 ஜூலை 2020 (16:36 IST)

நவம்பர் மாதம் வரை ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி விநியோகம் - தமிழக அரசு

தமிழகத்தில் கொரொனாவால் மக்கள் பாதிக்காத வண்ணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு துரிதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆயினும் நாள்தோறும் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்றில் இருந்து சென்னையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சாலையில் செல்வதைப் பார்க்க முடிந்தது.

இந்நிலையில், தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஏற்கனவே கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்டது போன்று வரும் நவம்பர் மாதம் வரை விலையில்லாமல் அரிசி  வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும்,  அனைத்து அரிசி அட்டை வைத்துள்ளோர்களுக்கும் வரும் நம்பவர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் எனவும், பருப்பு, சமையல், எண்ணெய் போன்ற பொருட்களை அடுத்த மாதம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

அதில் முக்கியமாக ஜூலை மாதம் ரேசனில் விலை கொடுத்து வாங்கியவர்கள் ஆகஸ்ட் மாதம் பொருட்களை இலவசமாக  வாங்கி ஈடு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.