வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவை மிகுந்த காளான் கிரேவி செய்ய...!!

தேவையான பொருள்கள்:
 
பட்டர் காளான் - 150 கிராம் 
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 2
முந்திரிப்பருப்பு - 10
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பூண்டு பல் - 10
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
மல்லித்தழை - சிறிது 
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
பெருஞ்சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி 
தக்காளி சாஸ் - 3 தேக்கரண்டி 
கஸ்தூரி மேத்தி - 2 தேக்கரண்டி 
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
செய்முறை:
 
முதலில் காளானை சுத்தப்படுத்தி நீளவாக்கில் வெட்டி வைக்கவும். பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் வெட்டி வைக்கவும். தக்காளியை பொடிதாக  நறுக்கி வைக்கவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணைய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை  போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி  பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும்.
 
ஆறியவுடன் மிக்ஸ்சியியில் வதக்கி வைத்துள்ள கலவையுடன் முந்திரிப்பருப்பு, ஏலக்காய், கிராம்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், பெருஞ்சீரகத்தூள், மல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 3 மேஜைக்கரண்டி எண்ணைய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து  நறுக்கி வைத்துள்ள பூண்டுபற்களை போட்டு  பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
 
பூண்டு பொன்னிறமானதும் காளானை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கிளறி 100 மில்லி தண்ணீர் சேர்த்து  அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்.. காளான் வெந்ததும் தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். பிறகு  தக்காளி சாஸ் சேர்க்கவும்.
 
கிரேவி கெட்டியானதும் கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்றாக கலக்கி விடவும். சுவையான காளான் கிரேவி தயார்.