1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
  4. How to make delicious carrot Alva...!

கேரட் அல்வா செய்ய...!!

கேரட் அல்வா
தேவையான பொருட்கள்:
 
கேரட் - 2
சர்க்கரை - 1/2 கப்
பால் - 1/2 கப்
நெய் - 1/4 கப்
கேசரி கலர் - சிறிதளவு
ஏலக்காய் பவுடர் - சிறிதளவு
முந்திரி பருப்பு - 10
செய்முறை:
 
முதலில் கேரட்டை தோலுரித்து துருவியில் வைத்து நன்றாக துருவிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி  பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் பாலை ஊற்றி கேரட்டை போட்டு வேக விடவும். பால் நன்றாக வற்றும் வரை  கிளறவும்.
 
கேரட் வெந்ததும் சீனியும், கேசரி கலரும் சேர்த்து நன்றாக கிளறவும். சர்க்கரை கரைந்து நன்கு சுருள வதங்கியதும் நெய்யை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.  இறுதியில் முந்திரிப் பருப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான கேரட் அல்வா தயார்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
சௌசௌவில் உள்ள வைட்டமின்கள் என்ன...? இதனை உணவில் சேர்ப்பதால் என்ன பயன்கள்...?