செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

நேந்திரம் சிப்ஸ் செய்ய !!

செய்ய தேவையான பொருட்கள்:
 
நேந்திரங்காய் - 3
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:
 
ஒரு வாழைப்பழத்தை எடுத்து உலர வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி கொதிக்க வைத்து அதில் மிதமான சூடு வந்தவுடன் துண்டுகளை எண்ணெயில் போட்டு விட வேண்டும்.

சில வினாடிகள் கழித்து மஞ்சள்தூள் கலந்த தண்ணீரை எண்ணெயில் கலந்து கிளறிவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து சிப்ஸை எடுத்துவிடலாம்
 
இவ்வாறு எண்ணெயில் இருந்து எடுத்தவுடன் அதை ஒரு காகிதத்தின் மேல் வைத்தால் தேவை இல்லாத எண்ணெய் வெளியேறிவிடும். சுவையான நேந்திரம் சிப்ஸ்  தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தனியாக தேனீருடன் சாப்பிடலாம்.
 
குறிப்பு:
 
அதிகம் பழுத்த பழத்தை பயன்படுத்தக்கூடாது, பொறிப்பதற்கு முன் அதில் உப்பு போடக்கூடாது. அதே போல், எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.