1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (16:45 IST)

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் ரத்து !

சமைய எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை ரத்து செய்யும் முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாகவும் இந்த நிதியை நடப்பாண்டு கொரோனா பேரிடருக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

சர்வதேச எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் சமையல் எரி வாயு சிலிண்டர் விலை ஏற்றம் கண்டுள்ளதாலும் மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது.

இந்த மாதத்தில் 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.594 ஆகவும், இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்கப் படமாட்டாது எனவும், சுமார் 4 மாதக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்குய் மானியம் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கு சுமார் 20ஆயிரம் கோடி வரை மிச்சமாகும் எனவும் இந்தத் தொகையை கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படுவதாக கூறியுள்ளது.