வியாழன், 16 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

கத்திரிக்காய் மசாலா செய்ய..!

தேவையான பொருட்கள்:
 
கத்திரிக்காய் - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
மல்லி தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பட்டை, பிரியாணி இலை - சிறிது
சோம்பு - கால் ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை :
 
கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து கொள்ளவும். மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும்  தக்காளியை எடுத்து கொள்ளவும்.
 
பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், அதில் பட்டை, சோம்பு பிரியாணி இலை தாளித்து, பின் அதனுடன் நறுக்கிய  வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன், தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு, அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி  விட வேண்டும். நன்கு வதக்கியதும் அதனுடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
கத்திரிக்காய் வெங்காயத்துடன் நன்றாக சேர்ந்து வதங்கியதும் தேவையான உப்பு, நீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். நீர் வற்றியதும்  கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறினால் சுவையான கத்திரிக்காய் மசாலா தயார்.