புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

சுவையான இறால் வறுவல் செய்ய வேண்டுமா....?

தேவையான பொருட்கள்:
 
இறால் - அரை கிலோ
மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி
சோள மாவு - 1/4 தேக்கரண்டி
அரிசி மாவு - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
* இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.  அதனுடன் மிளகாய்த் தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, அரிசி மாவு, எலுமிச்சை சாறு, உப்பு ஆகிய அனைத்துப் பொருள்களையும் இறாலோடு சேர்த்து கலந்து சுமார் இரண்டு மணி  நேரம் ஊற வைக்கவும்.
 
* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலைப் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். சுவையான இறால் வறுவல் தயார்.