1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
  4. To make garam masala powder at home...!!

வீட்டிலேயே கரம் மசாலா பொடி செய்ய...!!

கரம் மசாலா பொடி
தேவையான பொருள்கள்:
 
பெருஞ்சீரகம் (சோம்பு) - 100 கிராம் 
பட்டை - 10 கிராம் 
கிராம்பு - 10 கிராம் 
அன்னாசிப்பூ - 10 கிராம் 
ஏலக்காய் - 10 கிராம்
   
                                
செய்முறை:
 
பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய் ஆகிய எல்லா பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காயவைத்துக் கொள்ளவும். அல்லது அடுப்பில்  கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.
 
நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் பொடியாக அரைத்து கொல்ளவும். பிறகு பேப்பரில் பரப்பி வைக்கவும். சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு  வைக்கவும். கரம் மசாலா பொடியை பிரியாணி, குருமா வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
குப்பைமேனி இலையின் அற்புத மருத்துவ பலன்கள்....!!