திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : சனி, 22 பிப்ரவரி 2020 (15:18 IST)

சமையல் பாத்திரத்துக்குள்... உட்கார்ந்து சிக்கிக் கொண்ட குழந்தை !

சமையல் பாத்திரத்தில் உட்கார்ந்து சிக்கிக் கொண்ட குழந்தை !
பொதுவாக குழந்தைகள் கையில் கிடைத்தை எடுத்து வாயில் போடும், தனக்கு கிடைக்கும் பொருட்களை வைத்துக் கொண்டு அது விளையாட முற்படும். இளங்கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ப அதன் செயல்பாடுகள் இருக்கும்.
 
இந்த நிலையில்,   ஒரு குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த சோறு ஆக்கும் பாத்திரத்தில் சென்று உட்கார்ந்து கொண்டது. அதன்பின் குழந்தையால் வெளியே வர முடியவில்லை. 
 
அதைப் பார்த்தபெற்றோர் பதறிப்போய், தீயணைப்புத் துறையினருக்கு தகவல்  கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் சட்டியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த குழந்தை சில மணி போராட்டங்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.