ஆரோக்கியம் நிறைந்த கறிவேப்பிலை சட்னி செய்ய...!!

curry leaves chutney
Sasikala|
தேவையான பொருட்கள்:
 
கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு
மிளகாய் வத்தல் - 3
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
புளி - பாக்கு அளவு
பூண்டு பற்கள் - 4
உப்பு - தேவையான அளவு
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
 
அடுப்பில் கடாய் வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு வறுக்கவும். பிறகு அதோடு தேங்காய் வத்தலை போட்டு வறுக்கவும். பிறகு அதோடு தேங்காய் துருவல், புளி, பூண்டு, சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
 
அதே கடாயில் கறிவேப்பிலையை தேங்காய் துருவலுடன் சேர்த்து சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.  அடுப்பில் காடாய் வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு போட்டதும் சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான கறிவேப்பிலை சட்னி தயார். இவை இட்லி மற்றும் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :