வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

சுவையான கோதுமை அடை செய்ய....?

தேவையான பொருட்கள்:

சம்பா கோதுமை - 200 கிராம்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கோதுமை மாவு - 100 கிராம்
சோம்புத் தூள் - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
முருங்கைக் கீரை - கைப்பிடி அளவு
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 100 மில்லி
செய்முறை:
 
முதலில் சம்பா கோதுமையை அரை லிட்டர் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவிடவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு மற்றும் இஞ்சியைத் தட்டி வைக்கவும். 
 
ஊறிய சம்பா கோதுமையுடன், கோதுமை மாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனுடன் மிளகாய்த் தூள், சோம்புத் தூள், இஞ்சி,  பூண்டு, முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து அடை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடானவுடன் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். ஓரத்திலும் நடுவிலும் அரை தேக்கரண்டி  எண்ணெயை ஊற்றி வேகவிடவும். 2 நிமிடங்கள் கழித்து திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். சுவையான கோதுமை அடை தயார்.  சட்னியுடன் பரிமாறவும்.