திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
கொத்தமல்லி - 1 கட்டு
வெங்காயம் - 2
தக்காளி - 1
வரமிளகாய் - 5
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 பல்
இஞ்சி - 1 துண்டு
புளி - சுண்டைக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் கொத்தமல்லியினை ஆய்ந்து, நீரில் அலசிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியினை வெட்டிக்கொள்ளவும். ஒரு வாணலியை சூடாக்கி, அதில் எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு, வரமிளகாயினை போட்டு வறுக்கவும்.
 
மூன்றும் சிவந்ததும், கொத்தமல்லியினை போட்டு வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி உப்பு, ஒரு துண்டு இஞ்சி, பூண்டு பற்கள், புளியினை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும். 
 
பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தால் சுவையான கொத்தமல்லி  சட்னி தயார்.