செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (12:14 IST)

இட்லி சாப்பிட்டார் சட்னி தொட்டுக்கிட்டார் என புளுகியதைபோல... அரசை உலுக்கும் உதயநிதி!

கொரோனா காலம் துவங்கியது முதல் திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். 
 
கொரோனா பரிசோதனை முடிவுகள் குறித்து அரசு தரப்பில் வழங்கப்படும் அறிக்கைகளில் திடுப்தியில்லை தகவல்களில் உண்மை இல்லை. நீதிமன்றத்திற்கு அளிக்கும் தகவல்கள் இப்படித்தான் இருக்குமோ என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
 
இதனை குறிப்பிட்டு திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், இட்லி சாப்பிட்டார் சட்னி தொட்டுக்கிட்டார் என புளுகியதை போல 'கொரோனா பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தருகிறோம்' என எடுபிடி அரசு பொய்சொல்லவே நீதிமன்றமே குட்டியுள்ளது. கொரோனா மரணங்களில் பொய்க்கணக்கு எழுதியவர்கள் பரிசோதனைகளில் பொய்க்கதைகள் சொல்லாமல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.