1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளு சட்னி செய்ய...!!

கொள்ளு சட்னி செய்ய:
 
கொள்ளு - ஒரு கப்
பூண்டு - 3
கொத்தமல்லி - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை
வரமிளகாய் - 3
கொள்ளு சுண்டல் :
வேக‌ வைத்த‌ கொள்ளு - ஒரு கப்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுந்து - தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
உப்பு - தேவைக்கேற்ப‌
செய்முறை:
 
கொள்ளுவை 3 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் போட்டு 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, கொத்தமல்லி, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி கொள்ளவும். வதக்கியவற்றை சிறிது நேரம் ஆற  வைக்கவும்.
 
பிறகு வேக வைத்த கொள்ளுடன் வதக்கி ஆற வைத்தவற்றை சேர்த்து அரைக்கவும். சூடு சாப்பாட்டிற்கு மிகவும் ஏற்ற சட்னி. காரம் தேவைக்கு  தகுந்தாற் போல் மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். சுவையான ஆரோக்கியம் தரும் கொள்ளு சட்னி தயார்.