திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

தேங்காய் பால் புலாவ் செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
பாஸ்மதி அரிசி - 2 கப் 
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 
நறுக்கிய  கேரட் - 2 
பச்சை பட்டாணி - அரை கப்
பீன்ஸ் - 50 கிராம் 
காலிஃப்ளவர் - 100 கிராம் 
பச்சை மிளகாய் - 5 
இஞ்சி, பூண்டு தலா - 25 கிராம்
கொத்தமல்லி, புதினா- தேவைாயன அளவு
தேங்காய் துருவல் - 2 கப்
பட்டை - 1 அங்குலம் 
கிராம்பு - 2 
ஏலக்காய் - 2 
பிரியாணி இலை - சிறிது 
எண்ணெய் - 4 ஸ்பூன் 
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
அரிசியை கழுவி, அரை மணி நேரம்  ஊற வைக்கவும். பிறகு தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் தேங்காய் பால் எடுத்து  கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம் கேரட், பீன்ஸை சிறிய தாக  நறுக்கவும். காலிஃப்ளவரை  சிறியதாக நறுக்கி வெந்நீரில் அலசி வைக்கவும். இஞ்சி பூண்டு  பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாயை நைசாக அரைத்து கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர்  நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 
 
அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து லேசாக கிளறவும். இதனுடன் அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும். கொதித்து வரும் போது உப்பு போட்டு கலக்கி  பின்னர் குக்கரை மூடி விசில் போட்டு 10 நிம்டம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும். பின்  10 நிமிடம் கழித்து மூடியை திறந்து நெய் கொத்தமல்லி, புதினா இலைகளை தூவி கிளரினால் சுவையான புலாவ் ரெடி.