1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவை மிகுந்த முள்ளங்கி துவையல் செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
முள்ளங்கி - 3
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 2
கடலை பருப்பு - 25 கிராம்
தேங்காய் துண்டு - 3
வெங்காயம் - 1 பெரியது
தனியாத்தூள் - 1 மேசைக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 25 மி.லி.
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
சமையல் உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:
 
முதலில் முள்ளங்கியை நன்றாகக் கழுவி தோல் சீவி எடுக்கவும். பின் அதை சிறிய துண்டுகளாக மெலிதாக அரிந்து கொள்ளவும். அடுப்பை பற்றவைத்து மெதுவாக  எரியவிடவும்.

அதில் பாத்திரத்தை வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் காய்ந்த மிளகாய், கடலை பருப்பு இவற்றை அதில் போட்டு  வறுத்து தனியாக எடுத்துவைக்கவும்.
 
அரிந்துவைத்த முள்ளங்கியை ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு பொன் நிறமாக வதக்கி  எடுத்துக்கொள்ளவும்.
 
தேங்காய்த் துண்டுகளை அரிந்து எடுக்கவும். ஏற்கனவே வறுத்த கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இவை மசிந்தவுடன் தேங்காய், முள்ளங்கி, புளி, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், தனியாத்தூள் இவற்றையும் போட்டு உப்பு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து  எடுக்கவும்.
 
இப்போது மணம் மற்றும் சுவையுடன் கூடிய முள்ளங்கித் துவையல் தயார். இவை சாதம் மற்றும் இட்லி தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.