கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...
உலகெங்கும் உள்ள மக்கள் கோழி, ஆடு, மாடு, மீன் உள்ளிட்ட பல இறைச்சிகளையும் சாப்பிடுகிறார்கள். இந்தியாவில் அதிக அளவு கோழி, ஆடு, மாடு, மீன் ஆகிய இறைச்சிகளை சாப்பிடுகிறார்கள். அதில் பெரும்பானவர்கள் ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்நிலையில் எந்த இறைச்சியில் அதிக கலோரி உள்ளது? எந்த இறைச்சி அதிகம் சாப்பிடலாம் என்கிற விவரங்களை பார்ப்போம்.
ஆட்டு இறைச்சியை பொருத்தவரை அதில் கொழுப்பு அதிகமாகவே இருக்கிறது. அதனால் அதை சாப்பிடும் போது உடலில் அதிக அளவு கலோரிகள் சேரும். புரதத்தை விட ஆட்டு இறைச்சியில் அதிக அளவு கொழுப்பு இருக்கிறது.100 கிராம் மாட்டு இறைச்சியில் 230 முதல் 300 வரை கலோரிகள் இருக்கும்.
அதேநேரம் கோழி இறைச்சியில் மார்பு பகுதியில் 175 கலோரிகள் இருக்கும். மேலும் 100 கிராமுக்கு (மார்பு பகுதி) 31 கிராம் புரதம் இருக்கும். ஆனால் ஆட்டு இறைச்சியில் 25 கிராம் புரதம் மட்டுமெ இருக்கும். தேசிய சிக்கன் கவுன்சில் ஆய்வுப்படி கோழி இறைச்சியில் மெலிந்த புரதம் காணப்படும்.. அதிக கொழுப்புகள் இருக்காது.. எனவே உணவு கட்டுப்பாடு உள்ளவர்களுக்கு கோழி இறைச்சி நல்லது.
அதோடு கோழி இறைச்சியில் கொழுப்பு மிகவும் குறைவு.. எனவே இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களும் கோழி இறைச்சியை சாப்பிடலாம்.. எனவே ஆட்டு இறைச்சியை விட கோழி இறைச்சி சிறந்தது.. அதேநேரம் இரண்டையும் மிதமான அளவில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது..உங்களுக்கு அடிக்கடி இறைச்சி சாப்பிடும் பழக்கம் இருந்தால் கோழி இறைச்சி சாப்பிடுவது நல்லது.