என் கணவர் இவ்வளவு கொடூரமானவரா ? அதிர்ச்சியில் மனைவி செய்த காரியம் !

Last Modified புதன், 11 மார்ச் 2020 (08:32 IST)

உத்தர பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த நபர் ஒருவர் தனது மனைவி வீட்டில் இல்லாதபோது இறந்தவரின் மனித விரல்களைக் கொண்டு வந்து சமைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். 32 வயதாகும் இவர், தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய்யின் மனைவி இரவு
வெளியே சென்றுள்ளார். அவர் திரும்பி வீட்டுக்கு வந்தபோது ஏதோ மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிருப்தியான அவர், வீட்டு சமையலறையில் சென்ற்ய் பார்த்தபோது, அங்கு தன் கணவர் மனித விரல்களை சமைத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்த அவர் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லியுள்ளார். போலிஸார் வருவதைத் தெரிந்துகொண்ட சஞ்சய், வீட்டின் கதவுகளைப் பூட்டிக்கொண்டுள்ளார். போலிஸர் வந்து நீண்ட போராட்டத்துக்குப் பின் அவரைக் கைது செய்துள்ளனர். சஞ்சய்க்கு அருகில் உள்ள மயானத்தில் இருந்து அவர் அந்த விரல்கள் கிடைத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :