சத்தான கம்பு தோசை செய்ய !!
தேவையான பொருட்கள்:
புளித்த தோசை மாவு - அரை கப்
கம்பு மாவு - 1 கப்
உப்பு - தேவைக்கு
சீரகம் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளித்த தோசை மாவு, கம்பு மாவு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும். மாவு நீர்க்க இருக்க வேண்டும்.
இந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும். அடுப்பில் தோசை கல் வைத்து சூடானதும் தோசை மாவை கரண்டியினால் முதலில் கல்லின் ஓரத்தில் ஊற்ற ஆரம்பித்து நடு மத்தியில் வந்து சேருமாறு முடிக்க வேணடும். அதாவது ஒரு பெரிய வட்டம் போட்டு அதை நிரப்ப வேண்டும். இதுவே இந்த தோசை ஊற்றும் முறையாகும்.
தோசை மெல்லியதாக இருக்க வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும். பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும். பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவும். சத்தான கம்பு தோசை தயார்.