வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (12:14 IST)

தினமும் கம்பு சேர்த்த உணவுகளை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா...?

Kambu
கம்புவில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. தினமும் கம்மங்கூழை குடித்து வந்தால், இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரித்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது. குறிப்பாக ஆர்த்ரிடிஸ் மற்றும் எலும்பு முறிவு உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடிப்பது மிகவும் நல்லது.


தினமும் கம்பு சேர்த்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

கம்புவில் உள்ள மக்னீசியம், இரத்த நாள சுவற்றை தளர்வடையச் செய்து, இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையைத் தடுத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகள் அரிசிக்கு பதிலாக தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

கம்மங்கூழை தினமும் பருகி வந்தால், உடல் அதிகம் உஷ்ணமடைதை குறைத்து சீராக பராமரிக்கும். அதோடு கம்மங்கூழ் உடலுக்கு உடனடி ஆற்றலையும் தருகிறது.

கம்புவில் நார்சத்து உள்ளதால் அவர்கள் கம்பு பயிறு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசிஎடுக்காமல் இருக்கும், இதனால் அவர்களின் உடல் எடை குறையும்.