திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவையான உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ் செய்ய !!

Potato Rice Balls
தேவையான பொருட்கள்:

வெள்ளை சாதம் - 2 கப்
உருளைக்கிழங்கு  200 கிராம்
வெங்காயத்தாள் - 1 சிறிய கொத்து
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
காய்ந்த ஆரிகனோ - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி (கொரகொரப்பாக பொடித்தது)
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



செய்முறை:

உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோலை நீக்கி மசித்து கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், வெங்காயத்தாள், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வடித்த சாதத்தை போட்டு நன்றாக மசித்து கொள்ளவும். அதனுடன் மசித்த உருளைக்கிழங்கையும் போட்டு நன்றாக மசிக்கவும்.

அடுத்து வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், எலுமிச்சை சாறு, மிளகு தூள், காய்ந்த ஆரிகனோ, உப்பு சேர்த்து நன்றாக பிசைத்து கொள்ளவும். பிசைத்த கலவையை வேண்டிய வடிவில், வேண்டிய அளவில் உருட்டி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ் தயார். இதை தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.