வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவையான மொச்சை குழம்பு செய்ய !!

தேவையான பொருட்கள்: 
 
காய்ந்த மொச்சை - அரை கப்
புளி - 50 கிராம்
சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
கடுகு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
 
முதல் நாள் இரவே மொச்சையை ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து வேகவைத்த மொச்சையில் பாதியளவு சேர்க்கவும். 
 
பிறகு, புளியை ஊறவைத்துக் கரைத்து, அதில் சாம்பார் பொடி, உப்பு போட்டு மொச்சையுடன் சேர்த்து, நன்கு கலந்து கொதிக்க விடவும். மீதியிருக்கும்  மொச்சையுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். 
 
எல்லாம் ஒன்றாக நன்கு கலந்து கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். இதனை சாதத்துடன் சாப்பிடலாம். தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்  கொள்ளலாம்.