1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சுவையான பால் கோவா செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பால் - 500 மில்லி
எலுமிச்சை சாறு - 3, 4 சொட்டு 
சர்க்கரை - 4 தேக்கரண்டி
நெய் - 2 முதல் 3 மேசைக் கரண்டி

செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடு பண்ணவும். சூடு பண்ணிய பாலில் எலுமிச்சை சாறு சேர்த்து அதை தனியாக ஒதுக்கி வைத்து விடவும்.

இன்னொரு கடாயை  சூடு பண்ணவும். சூடு ஆனதும் 2 அல்லது 3 மேசைக் கரண்டி நெய் சேர்க்கவும். பிறகு அதில் பாலை ஊற்றி பின்னர் சர்க்கரை சேர்க்கவும்.
 
சர்க்கரை சேர்த்ததும் நன்கு கிளறுங்கள். சர்க்கரை கரைந்து மீண்டும் திரண்டு வரும்போது, இறக்கிவைத்து, நன்கு கிளறுங்கள். பால்கோவா திரண்டு வரும். இப்போது சுவையான பால் கோவா தயார்.