ருசியான கோங்குரா சட்னி செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
புளிச்ச கீரை - 1 கட்டு
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
பூண்டு - 15 பல்
மிளகாய் தூள் - 1 tsp
காய்ந்த மிளகாய் - 2
வெந்தயம் - 1/4 tsp
தனியா (விதை) - 1 tbsp
கடுகு - 1 tsp
சீரகம் - 1/2 tsp
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 tsp
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப்.
செய்முறை:
 
முதலில் புளிச்ச கீரையை கழுவி பொடியாக நறுக்கி காயவைக்கவும். புளியை கழுவிவிட்டு சிறிதளவு வெந்நீர் விட்டு ஊறவைக்கவும். வாணலியில் வெந்தயம் மற்றும் தனியாவை எண்ணெயில்லாமல் வறுதெடுக்கவும்.
 
வெந்தயம் மற்றும் தனியாவை கொரகொரப்பாக பொடித்து வைக்கவும். புளி தண்ணீர் மற்றும் 10 பல் பூண்டை ஒன்றாக அரைத்து வைக்கவும். அரை கப்  எண்ணெய்யில் கீரையை நன்றாக வதக்கவும். கீரையில் உள்ள நீர் வற்றும்வரை வதக்கவும்.
 
மீதமுள்ள எண்ணெய்யில் கடுகு, சீரகம், மீதமுள்ள பொடியாக நறுக்கிய பூண்டுமர்றும் பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் தாளித்து வதக்கி வைத்துள்ள கீரையில் கொட்டவும். எண்ணெய் சூடாக இருக்கும் போதே இதனுடன் அரைத்துவைத்துள்ள பொடி, மிளகாய் தூள் உப்பு மற்றும் புளி கலவையை  சேர்க்கவும். நன்றாக கலறினால் ருசியான கோங்குரா சட்னி தயார்.


இதில் மேலும் படிக்கவும் :