ஆரோக்கியம் தரும் பிரண்டை துவையல் செய்ய....!

ஆரோக்கியம் தரும் பிரண்டை துவையல் செய்ய....!
 
தேவையான பொருட்கள்:
 
 கறிவேப்பிலை - சிறிது
 பிரண்டை - 1 கப் (சுத்தம் செய்யப்பட்டது)
 காய்ந்த மிளகாய் - 7
 புளி - சிறு எலுமிச்சையளவு
 எள் - 1 கரண்டி
 உளுந்து - 50 கிராம்
 கடலை பருப்பு - 50 கிராம்
 உப்பு - தேவைக்கு
செய்முறை:
 
முதலில் பிரண்டை, கறிவேப்பிலை இரண்டையும் ஆய்ந்து, பிறகு அலசி வைக்கவும். பருப்புகள், மிளகாய், புளி, எள் எல்லாவற்றையும் வாணலியில் வறுத்து  வைக்கவேண்டும். பிறகு பிரண்டை, கறிவேப்பிலை இரண்டையும் வதக்கி வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் உப்புடன் வதக்கியவற்றையும், வறுத்தவற்றையும்  சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் ஆரோக்கியம் மிகுந்த சுவையான பிரண்டை துவையல் தயார்.


இதில் மேலும் படிக்கவும் :