சுவையான கோபி மஞ்சூரியன் செய்ய...!!
தேவையான பொருட்கள்:
காலிஃபிளவர் - 1
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக)
முட்டை - 1
அஜினோமோட்டோ - 2 சிட்டிகை
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - அரை லிட்டர்
கார்ன்ஃப்ளார் - 25 கிராம்
மைதா மாவு - 50 கிராம்
தக்காளி சாஸ் - 1/4 கப்
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கொத்து (பொடியாக)
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன் ஃபளார், அஜினோமோட்டோ, உப்பு கால் தேக்கரண்டி மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவேண்டும்.
காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் காலிஃபிளவரை முதலில் அடித்து வைத்துள்ள முட்டை கருவில் தோய்த்து எடுத்து பிறகு கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமானதும் எடுக்கவேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சோயா சாஸ் சேர்த்து கிளறவேண்டும். அதன் பிறகு தக்காளி சாஸ் ஊற்றி உப்பு, அஜினோமோட்டோ மிளகுத்தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிளறவேண்டும். பிறகு பொரித்து வைத்திருக்கும் காலிஃபிளவரை போட்டு மசாலாவுடன் நன்கு சேருமாறு கிளறி இறக்க வேண்டும். சுவையான கோபி மஞ்சூரியன் தயார்.