சமையல் எரிவாயு புக் செய்ய நாடு முழுவதும் ஒரே எண் அறிமுகம்!
நாடு முழுவதும் சமையல் எரிவாய் புக் செய்வதற்கு அந்தந்த டீலர்கள் கொடுக்கும் எண்களையே மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாகவும் புகார் எழுந்தது.
இதில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் சமையல் எரிவாயு ஆர்டர் செய்ய இனிமேல் 7718955555 என்ற ஒரே எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புக் செய்தால் போதும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.