1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
  4. How to make nutritious Mudakathan Keerai Idly...?

சத்தான முடக்கத்தான் கீரை இட்லி செய்வது எப்படி....?

முடக்கத்தான் கீரை இட்லி
தேவையான பொருட்கள்:
 
இட்லி அரிசி - 4 கப்
உளுந்து - 3/4 கப்
வெந்தயம் - 2 ஸ்பூன்
முடக்கத்தான் கீரை - 2 கப்
வாழை இலை - 1
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து  அரைத்துக் கொள்ளவும்.

இந்த மாவில் உப்பு சேர்த்துக் கரைத்துவைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை இடலையாக (அகலமாக) கொஞ்சம் தடிமனாக ஊற்றி மூடிவைத்து ஆவியில் வேகவிடவும்.
 
பத்து நிமிடங்களில் வாழை இலை மணத்துடன், சுடச்சுட சுவையான, சத்தான முடக்கத்தான் வாழை இலை இட்லி தயார்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
நண்டு சூப் செய்வது எப்படி? ரெசிபீ இதோ...!!