வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சூப்பரான சுவையான பன்னீர் சுக்கா செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
பன்னீர் - 300 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத்தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் (மல்லித்தூள்) - அரை தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு
எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி

செய்முறை:
 
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து 1 தேக்கரண்டி நெய் விட்டு வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
 
கடாயில் மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி அத்துடன்  மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
 
மசாலா சுண்டி வரும் போது வெண்ணெய் சேர்த்து பிரட்டி சுக்காவாக இறக்கவும். இறக்கும்போது எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.  சூப்பரான பன்னீர் சுக்கா தயார்.